NATIONAL

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மாநில அரசு விரைந்து கையாள வேண்டும்- சட்டமன்றத்தில் கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 15- மக்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயம் போன்ற விவகாரங்கள் மீது மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக விளங்குவதாலும் அதனையொட்டி அதிகம் மக்கள் வசிப்பதாலும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்று அவர் புக்கிட் லஞ்சான் தொகுதி உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார்.

தற்போது 1.3 பாகையாக இருக்கும் பூமியின் வெப்ப நிலை எதிர்காலத்தில் இன்னும் உயரும் சாத்தியம் உள்ளது. இதனால் கடலில் நீர் மட்டும் அதிகரிப்பதற்கான அபாயமும் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

அதிகரித்து வரும் உலக வெப்பநிலையைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

மாநிலச் சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கு தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லா நினா மற்றும் எல் நினோ பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் அவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக நாடு எதிர்நோக்கி வரும் கடுமையான மழைப்பொழிவு போன்றவை எல் நினோ பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாக தென்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :