NATIONAL

ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) மற்றும் ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமாவா சிலாங்கூர் (SMIS) ஆகிய திட்டங்களின் பயன்பாடு விரைவுபடுத்த ஒரு சிறப்பு செயலியை உருவாக்க பரிந்துரை

ஷா ஆலம், மார்ச் 16: பெர்மாதாங் தொகுதி உறுப்பினர்கள், ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) மற்றும் ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா சிலாங்கூர் (SMIS) ஆகிய திட்டங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்த உதவும் வகையில் ஒரு சிறப்பு செயலியை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

ஏனென்றால், இத்திட்டங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது மக்களிடையே கவலையை ஏற்படுத்துவதோடு, மாநில அரசின் கொள்கைகள் பற்றிய தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தும் என்று ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“விண்ணப்பத்திற்கான மூன்று மாதக் காலம் மிகவும் தாமதமானது. டிஜிட்டல் மயமாக்கலின் இந்த காலகட்டத்தில், அத்திட்டங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான ஒரு சிறந்த முறையை மாநில அரசு சிந்திக்க வேண்டும்.

“இந்த திட்டங்களுக்கு ஒரு சிறப்பு செயலியை உருவாக்கலாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

“உதாரணமாக, ‘வேவ் பே’ மூலம் சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டத்திற்கு (INSAN) விண்ணப்பிக்கும் முறையை இவ்விரண்டு திட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்தலாம், காரணம் அம்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :