NATIONAL

புத்ராஜெயா வழித்தடத்தில் மார்ச் 31 வரை இலவச எம்ஆர்டி சேவையைப் பிரதமர் அறிவித்தார்

ஷா ஆலம், மார்ச் 16: புத்ராஜெயா வழித்தடத்தில் எம்ஆர்டி சேவையை இன்று முதல் மார்ச் 31 வரை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் அறிவித்தார்.

குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான இச்சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதா கப் பிரதமர் கூறினார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

57.7-கிலோமீட்டர் தூரமுடைய இந்த புத்ராஜெயா எம்ஆர்டி சேவையானது கிள்ளான் பள்ளத்தாக்கு எம்ஆர்டியின் இரண்டாவது திட்டமாகும். இதற்கு RM30.53 பில்லியன் அல்லது 3053 கோடி செலவாகியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழித்தடத்தில் பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, கெப்போங், ஜாலான் துன் ரசாக், கூச்சாய் லாமா, ஸ்ரீ கெம்பாங்கன், சைபர் ஜெயா மற்றும் புத்ராஜெயா போன்ற மக்கள் அதிக நெருக்கமாக வாழும்  பகுதிகளை உள்ளடக்கிய 36 நிலையங்கள் உள்ளன.


Pengarang :