NATIONAL

இந்த ஆண்டு 2,800 குழந்தைகள் சத்துணவு உதவித் திட்டத்தில் பயனடைந்து உள்ளனர்

ஷா ஆலம், மார்ச் 16: இந்த ஆண்டு சத்துணவு  உதவித் திட்டமான அனக் சிலாங்கூர் அனக் சி ஹாட் (ASAS) மூலம் மொத்தம் 2,800 குழந்தைகள் பலன் பெறுவார்கள்.

பொது சுகாதார EXCO இல்திசம் சிலாங்கூர் ஆரோக்கியமான நிகழ்ச்சி நிரல் மூலம், இந்த ஆண்டு திட்டத்தை செயல் படுத்துவதற்காக மாநில அரசு RM500,000 ஒதுக்கியது.

ஆரம்பக் கட்டமாக”சிலாங்கூரில் உள்ள ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கு (DUN) மொத்தம் 50 பெறுநர்களுக்கு  விநியோகிப்பதற்காக  மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது மாவட்டங்களில்  கார்னிவல் பேக்ஜ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதை பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர், அங்கீகரிக்கப்பட்ட சமையல்காரர்கள் மூலம் நியாயமான விலையில் சத்தான உணவு தயாரிப்பதை உறுதி படுத்திக் கொள்ளலாம்.

“மேலும்,  56 சட்டமன்றங்களில் ASAS மையங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான இடமாக நிறுவப்படும் அது, நீண்ட காலத்திற்கு இந்த திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும்” என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

லெம்பா ஜெயா பிரதிநிதி ஹனிசா மொஹமட் தல்ஹாவின் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சித்தி மரியா, உணவு தயாரிப்பதை கண்காணிப்பதுடன், பயனாளிகளின் உயரம் மற்றும் எடை தொடர்பான தரவுகளை சேகரிக்க சமூக சுகாதார தன்னார்வலர்கள் (SUKA) கண்காணிப்பில் ஈடுபடும் என்றார்.

“சம்பந்தப்பட்ட குழந்தைகள் எடை, உயரம் மற்றும் உணவுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பெறுநரின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம்  பொறுப்பு வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :