SELANGOR

1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் கீழ் உதவியைப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 20: பாயா ஜராஸ் தொகுதியை சுற்றியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற பகுதி சௌஜனா உத்தமா பள்ளி மாணவர்கள் உதவியைப் பெற்றனர்.

சிலாங்கூர் பரிவுமிக்க துறையின் இரண்டாம் கட்ட திட்டத்தை முன்னிட்டு RM100 மதிப்புடைய வவுச்சர்கள் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்திற்காக வழங்கப்பட்டது என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

“நேற்று இரண்டாம் கட்டமாக B40 குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு இன்று தொடங்கும் பள்ளி அமர்வுக்கு தயாராவதற்காக அந்த உதவி வழங்கப்பட்டது.

“முன்பு, எகோன்சேவ் சுங்கை பூலோ வாகன நிறுத்துமிடத்தில் முதல் கட்டமாகச் சுமார் 800 வவுச்சர்களை விநியோகித்துள்ளோம். இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய மொத்தம் RM200,000 ஒதுக்கப்பட்டது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Pengarang :