SELANGOR

ரமலான் மாதத்தில் கார் நிறுத்துமிட அபராதம் 10.00 வெள்ளியாக குறைப்பு- எம்.பி.எஸ்.ஏ. அறிவிப்பு

ஷா ஆலம், மார்ச் 21- நோன்பு மாதம் முழுவதும் கார் நிறுத்துமிட
குற்றங்களுக்கான அபராதத் தொகையை குறைந்த பட்சம் 10.00
வெள்ளியாக குறைக்கப்படும் என ஷா ஆலம் மாநகர் மன்றம்
(எம்.பி.எஸ்.ஏ.) அறிவித்துள்ளது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2007ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து
உத்தரவின் கீழ் வம் 23 மார்ச் முதல் 21 ஏப்ரல் வரை இந்த அபராதத்
தொகை கழிவு அமலில் இருக்கும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக
மற்றும் பொது உறவு இயக்குநர் ஷாரின் அகமது கூறினார்.

இது தவிர எம்.பி.எஸ்.ஏ. துணைச் சட்டங்களின் கீழ் சில குற்றங்களுக்கு 70
விழுக்காடு வரை அபராதக் கழிவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

1983ஆம் ஆண்டு சிகையலங்கரிப்பு கடை துணைச் சட்டம், 2005ஆம்
ஆண்டு பூங்கா துணைச் சட்டம், 2007ஆம் ஆண்டு அங்காடி வியாபார
துணைச் சட்டம் 2007ஆம் ஆண்டு சிறு சந்தை துணைச் சட்டம்
ஆகியவற்றின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்கு இந்த அபராதக் கழிவு
வழங்கப்படும் என்றார் அவர்.

விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் உள்ள டிரைவ் ட்ரூ எனப்படும் வாகனங்களில்
இருந்தவாறு அபராதம் செலுத்தும் ஓரிட முகப்பிடம் மற்றும் சுங்கை
பூலோ, கோத்தா கெமுனிங்கில் உள்ள மாநகர் மன்ற கிளை
அலுவலகங்களில இந்த அபராதத் தொகையைச் செலுத்த முடியும் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :