NATIONAL

இரண்டு மணி நேரத் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அறிமுகப்படுத்தப்படும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) இரண்டு மணி நேரத் தற்காலிக வாகன நிறுத்துமிடத்தை இன்று அறிமுகப் படுத்தியுள்ளது.

செக்‌ஷன் 52, SS21 (டாமன்சாரா உத்தாமா) மற்றும் பிரிவு 14 இல் உள்ள பிரதான சாலைகளில் இந்த தற்காலிக வாகன நிறுத்துமிடம் செயல்படுத்தப்பட்டது என்று பெட்டாலிங் ஜெயா மேயர் கூறினார்.

“முதல் கட்டம் செக்‌ஷன் 52இல் 50 வாகன நிறுத்துமிடங்களை உள்ளடக்கியது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வரும்” என்று முகமட் அசான் முகமாட் அமீர் கூறினார்.

அதிக மக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் மையப் பகுதிகளில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு மணி நேர தற்காலிக வாகன நிறுத்துமிடம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி முதல் மாலை 6.30 வரை செயல்படும். கட்டண விகிதம் அரை மணி நேரத்திற்கு 60 சென் ஆகும்.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி கடந்த ஆண்டு RM15.4 மில்லியன் வாகன நிறுத்தும் கட்டண வசூலைப் பதிவுசெய்தது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி, சிலாங்கூர் முழுவதும் அதிக வசூலைப் பதிவு செய்தது.


Pengarang :