NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 25: நேற்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி தற்காலிகத் தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 369 பேராக தொடர்ந்து குறைந்து வருவதால், பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது.

தற்காலிகத் தங்கும் மையத்தில் தங்கி இருந்த 50 பேர் வெள்ளம் குறைந்த காரணத்தால் தத்தம் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

“வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீடு திரும்ப முடிந்தது மற்றும் அவர்களின் வீடுகளும் சுத்தம் செய்யப் பட்டுள்ளது” என்று மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஐந்து தற்காலிகத் தங்கும் மையங்களில் இன்னும் 105 குடும்பங்கள் தஞ்சம் அடைந்துள்ளன. அதே வேளையில், பெக்கோக் அணையில் உள்ள பெக்கோக் நதி 19.00 மீட்டர் அளவோடு எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

– பெர்னாமா


Pengarang :