NATIONAL

நோன்பு எடுக்காத நபர்களுக்கு உணவு விற்பனை

ஷா ஆலம், மார்ச் 27: கோத்தா பாருவில் உள்ள வியாபாரி ஒருவர், நோன்பு எடுக்காத நபர்களுக்கு விற்பதற்காக உணவு பொட்டலங்களை கழிப்பறையில் உள்ள சலவை இயந்திரத்தில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கையைப் பாச்சோக் மத அலுவலகம் மற்றும் பாச்சோக் மாநகராட்சி நேற்று காலை மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையின் மூலம் கண்டறிந்தது. 20க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாச்சோக் மத அதிகாரி மாட் யூசோப் கூறுகையில், 40 வயதுடைய அப்பெண் வியாபாரியின் படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தேநீரையும் அவரது தரப்பினர் கண்டுபிடித்தனர்.

“விசாரணையின் விளைவாக, நோன்பு எடுக்காத நபர்கள் உணவை வாங்குவதற்காக அவரைத் தொடர்பு கொள்வர் என அவ்வீட்டின் உரிமையாளர் (வியாபாரி) ஒப்புக்கொண்டார்.

“நோன்பு எடுக்காத நபர்களுக்கு உணவை தனது வீட்டிலிருந்து விற்பனை செய்வதாக அந்தப் பெண் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அப்பெண் வியாபாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது,.

அச்செயலை மீண்டும் செய்யாமல் இருக்க, அந்த பெண்ணுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும், இச்சம்பவம் தொடர்பில் எந்த கைது நடவடிக்கையும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :