SELANGOR

82 யூனிட் ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) மொத்தக் கழிவுத் தொட்டிகள் விநியோகம் – உலு சிலாங்கூர் மாநகராட்சி

ஷா ஆலம், மார்ச் 28:  ஐடில்ஃபிட்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு  உலு சிலாங்கூர் மாநகராட்சி (எம்பிஎச்எஸ்) 82 யூனிட் ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) மொத்தக் கழிவுத் தொட்டிகளைப் பொதுமக்கள் மொத்தக் கழிவுகள், தளவாடங்கள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்ற வழங்குகிறது.

மூன்று டன் எடையுள்ள மொத்தக் குப்பைத் தொட்டிகளை விநியோகிக்கும் பணி இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் (பிபிடி) தெரிவித்தார்.

“ரோரோ தொட்டிகள் உலு சிலாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகள், அதாவது பத்தாங் காலி, புக்கிட் பெருந்துங், புக்கிட் செந்தோசா, கோலாகுபூ பாரு மற்றும் பிற பகுதிகளில் எட்டு நாட்களுக்கு வைக்கப்படும்.

“தொட்டி நிரம்பியதாக கண்டறியப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே குப்பைகள்   அகற்றப்படும்.

“குடியிருப்பாளர்கள் ரோரோ தொட்டிகளில் மொத்த கழிவுகளை வீசுவதன் மூலம் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஒப்பந்தக்காரர்கள் எளிதாக குப்பைகளை சேகரிப்பதையும், சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாகவும் வசதியாகவும் இருப்பதையும் உறுதிப் படுத்துகிறது” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுக் கழிவுகள் அல்லது சமையலறைக் கழிவுகளை இத்தொட்டிகளில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் உலு சிலாங்கூர் மாநகராட்சி மக்களுக்கு நினைவூட்டியது.

பொதுமக்கள் மேலும் தகவலுக்கு உலு சிலாங்கூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு துறையை 03-60641050 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :