NATIONAL

தீவிபத்தில் 4 முதல் 8 வயது வரையிலான நான்கு சிறார்கள் மரணம்- மூவாரில் சம்பவம்

ஜொகூர் பாரு, மார்ச் 30- மூவார், லோரோங் ஹாஜி முகமது, கம்போங்
சபாக் ஆவோர் எனும் இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்டத்
தீயில் நான்கு சிறார்கள் உயிரிழந்தனர்.

இந்த கோரச் சம்வத்தில் 4 மற்றும் 6 வயதுடைய இரு சிறுமிகளும் 3
மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்களும் உயிரிழந்து விட்டதை சம்பவ
இடத்திலிருந்த மருத்துவக் குழுவினர் உறுதி செய்ததாக மூவார்
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் உதவி ஆணையர் 11
ஷரிசால் மொக்தார் கூறினார்.

இவ்விபத்து தொடர்பில் இரவு 7.49 மணியளவில் தீயணைப்பு
நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீயணைப்புக்
குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை அடைந்த
போது பகுதி பலகையிலான அந்த வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி தீயில்
அழிந்து விட்டதை அவர்கள் கண்டனர் என அவர் குறிப்பிட்டார்.

தீ முழுமையாகப் கட்டப்படுத்தப்பட்டப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களைத்
தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நான்குச் சிறார்களும்
வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.

எனினும் மருத்துவக் குழுவினர் நடத்திய சோதனையில் அந்நால்வரும்
இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது என ஷரிசால் சொன்னார்.

இறந்த நான்கு சிறார்களின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு
ஆராயப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :