SELANGOR

உணவு வணிகர்கள் ரஹ்மா மெனு திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

கோலா லங்காட், மார்ச் 30: சிலாங்கூர் அரசு, மாநிலத்தில் உள்ள உணவு வணிகர்கள் ரஹ்மா மெனு திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கிறது.

நுகர்வோர் விவகாரங்கள் எஸ்கோ இந்த திட்டமானது ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் குறைந்த விலையில் உணவைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று கூறினார்.

“வர்த்தகர்கள் ஒன்று அல்லது இரண்டு மெனுக்களை RM5 மற்றும் அதற்கும் குறைவான விலையில் விற்கலாம். இதன் வழி ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தங்கள் நிதி வசதிக்கு ஏற்ப உணவை வாங்க முடியும்” என்று முகமட் ஜவாவி அஹ்மத் முக்னி கூறினார்.

அரசாங்கம் சமீபத்தில் ரஹ்மா மெனுவை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு RM5 மற்றும் அதற்கும் குறைவான விலையில் உணவை விற்கும் நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :