NATIONAL

18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வு- அமைச்சர் சிவகுமார் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 30- சுமார் 18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்
பெயர்ந்து விட்டதாக 2022ஆம் ஆண்டிற்கான புலம்பெயர்வோர் சர்வதேச
அமைப்பின் உலக இடம்பெயர்வு அறிக்கை கூறுகிறது என மனித வள அமைச்சர் வ.
சிவகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் சிறப்பு கூட்டம் நேற்று நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்றது.

அப்போது உரையாற்றிய மனித வள அமைச்சர் சிவகுமார் , சராசரி உலகளாவிய
புலம்பெயர்ந்தோர் விகிதம் 3.6 விழுக்காடு மற்றும் ஒப்பிடுகையில், மலேசியாவின்
இடம்பெயர்வு விகிதம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5.6 விழுக்காடு அல்லது 18
லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

இந்த எண்ணிக்கையில் 11 லட்சத்து 30,000 பேர்  சிங்கப்பூரில் உள்ளனர் என்று அவர்
விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்தில் பல நாடாளுமன்ற கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :