NATIONAL

ஆசிரியர்கள் தேவைப்படும் ஆறு முக்கிய பாடங்களைக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 30: பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் ஆறு முக்கிய பாடங்களை கல்வி அமைச்சகம் (கேபிஎம்) அடையாளம் கண்டுள்ளதாக மக்களைவில் இன்று தெரிவித்துள்ளது.

அவை மலாய், ஆங்கிலம், இஸ்லாமியக் கல்வி, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், கலைக்கல்வி மற்றும் வரலாறு ஆகியவை பாடங்கள் என்று துணைக் கல்வி அமைச்சர் லீம் ஹுய் யிங் கூறினார்.

“கல்வி அமைச்சு 2021 முதல் ஜனவரி 2023 வரை ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க “ஆன் ஓவ்“ முறையில் 22,327 ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

“இருப்பினும், எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆசிரியர்களை நியமிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வெளி பல்கலைக்கழகங்களில் இருந்து ஆசிரியர்களை பணியமர்த்துவோம்,” என்று அஹ்மட் தர்மிசி சுலைமான் கேள்விக்குப் பதிலளித்தார். புதிய ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது காலியிடங்கள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் தேவைப்படும் பாடங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டது என்று லீம் கூறினார்.

கல்விச் சேவைகள் ஆணைக்குழு (SPP) நேர்காணலில் தோல்வியடைந்த பட்டதாரிகளின் நிலை குறித்து விவியன் வோங் ஷிர் யீயின் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த லீம், பட்டதாரிகள் முடிவுகள் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு “mySPP“ மூலம் அதிகாரப்பூர்வ SPP போர்ட்டலில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றார். அவர்கள் 45 வயதை அடையும் வரை தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

– பெர்னாமா


Pengarang :