NATIONAL

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களைக் குழப்பும் வகையில் விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்கவும்

ஷா ஆலம், ஏப்ரல் 2: வியாபாரிகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொதுமக்களைக் குழப்பும் வகையில் விளம்பரங்கள் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

முகமட் இக்பால் கூறுகையில், இங்குள்ள செக்‌ஷன் 7ல் உள்ள ஒரு துணிக்கடையில் RM1க்கு குறைந்த விலையில் துணிகள் விற்கப்படுவதாகத் தவறான தகவல் பரவியதைத் தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விளம்பரங்களுக்கும் பொதுமக்கள் எளிதில் பாதிக்கப்பட கூடாது

என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் காலை 10.30 மணி அளவில் புகார் வந்ததாகத் தெரிவித்தார்.

“காலை 11.45 மணியளவில் பாதுகாப்பு காரணங்களுக்காக, வருகையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாததால், கடை நிர்வாகம் செயல்பாட்டை நிறுத்த ஒப்புக்கொண்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரும் இதுவரை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் முகமட் இக்பால் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :