SELANGOR

இலவசப் பரிசோதனையில் நோய் கண்டறியப்பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு வரத் தவறுவது ஏன்? மாநில அரசு ஆய்வு

கிள்ளான், ஏப் 3- சிலாங்கூர் சாரிங் எனப்படும் இலவச மருத்துவ
பரிசோதனைத் திட்டதின் போது நோய் கண்டறியப்பட்டவர்கள் தொடர்
சிகிச்சைக்கு வரத் தவறுவதற்கான காரணத்தை மாநில அரசு ஆராய்ந்து
வருகிறது.

இந்த தொடர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் இது குறித்து
ஆலோசகச் சேவையைப் பெறுவதற்கு பலர் செல்கேர் கிளினிக்குகளுக்கு
வரத் தவறியுள்ளதாகப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தொடக்கக் கட்ட சோதனையின் போது பலருக்கு கொலஸ்ட்ரோல்
அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. தொடர் சிகிச்சைக்காக
மருத்துவரைச் சந்திக்கும்படி தகவல் அனுப்பினாலும் அவர்கள்
வருவதில்லை என்று அவர் சொன்னார்.

தொடர் சிகிச்சைக்காக மருத்துவர்களைச் சந்திப்பவர்கள் எண்ணிக்கை
மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு கிளினிக் தொலைவில் உள்ளது
அல்லது இதர அம்சங்கள் காரணமா என்பதைக் கண்டறிய மாநில அரச
ஆய்வினை மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான், கே.பி.ஜே. நிபுணத்துவ மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற
சிலாங்கூர் மாநில நிலையிலான ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

நோய்களைக் முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சிலாங்கூர் அரசு
கடந்தாண்டு மே முதல் செப்டம்பர் வரை சிலாங்கூர் சாரிங் எனும் இலவச
மருத்துவப் பரிசோதனையை நடத்தியது. 34 லட்சம் வெள்ளி செலவில்
நடத்தப்பட்ட இந்த மருத்துவப் பரிசோதனையில் 45,000 பேர் பங்கு

கொண்டனர். அவர்களில் 4,809 பேருக்கு தொடர் சிகிச்சைத் தேவைப்படுவது
கண்டறியப்பட்டது.


Pengarang :