SELANGOR

சிறப்புக் குழந்தைகளை ஆதரிப்பதன் மூலம் சமூகத்தில் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும்

கிள்ளான், ஏப்ரல் 3: சிறப்புக் குழந்தைகளை, குறிப்பாக ஆட்டிசம் கொண்ட குழந்தைகளை ஆதரிப்பதன் மூலமும் நன்கு புரிந்துகொள்வதன் மூலமும் சமூகம் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

சமூகத்தில் ஒரு சிலர் பெற்றோர்களைக் குறை கூறுவதாகவும், அக்குழந்தைகள் வெளியில் இருக்கும் போது நன்றாக நடந்து கொள்ள பெற்றோர்கள் அவர்களுக்குக் கற்பிக்கத் தவறிவிட்டதாகவும் நினைக்கிறார்கள் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்..

“ஆட்டிசம் தினத்தை கொண்டாடுவதன் மூலம், இந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை சமூகம் புரிந்து கொண்டு, அவர்களை இழிவு படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் நிலையை உணர்ந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.

நேற்று கேபிஜே கிள்ளான் சிறப்பு மருத்துவமனையில் சிலாங்கூர் மாநில அளவில் ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை கொண்டாடிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

“சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பதில் குடும்பங்களின் சுமையைக் குறைக்க உதவுவதில் நாங்கள் பல்வேறு நன்மை தரும் செயல்களை மேற்கொள்கிறோம்  என்றார்  அவர்.


Pengarang :