SELANGOR

கற்றல் குறைபாடுகள் மற்றும்  உடல் ஊனமுற்ற  குழந்தைகளின் பெற்றோர்கள் ரி.ம 16,000 வரை வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 3: கற்றல் குறைபாடுகள்,  உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் ரி.ம 16,000 வரையிலான பல்வேறு வரிச் சலுகைகள் பெறத் தகுதியுடையவர்கள்.

சமூக நலத் துறையில் (ஜெ.கே.எம்) குழந்தை பதிவு செய்யப்பட்டிருந்தால், அடிப்படை ஆதரவு உபகரணங்களை ரி.ம 6,000 வரை வாங்குவதற்கான செலவை இது ஈடுசெய்கிறது என்று துணை நிதி அமைச்சர் கூறினார்.

மேலும், குழந்தை வரி நிவாரணம் ரி.ம 6,000 மற்றும் வருமான வரி ரி.ம 4,000 வரை வழங்கப் பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

“முடிவாக, அனைத்து விதிவிலக்குகளையும் சேர்த்தால், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் உட்பட ஊனமுற்ற குழந்தைகளுக்கான பெற்றோர்கள் ரி.ம 16,000 வரை பெற தகுதியுடையவர்கள்,” என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் நடந்த நிறைவு அமர்வில் கூறினார்.

இதற்கிடையில், ரி.ம 4,000 வரையிலான வருமான வரிச் சலுகை என்பது சம்பந்தப்பட்ட குழுக்களின் கவலையின் அடையாளமாக அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய கொள்கை என்று அவர் விளக்கினார்.

“ஒருவேளை இந்த எண்ணிக்கை இன்னும் போதுமானதாக இல்லை என்றால், எதிர்காலத்தில் அதிகரிக்க அனைத்து பரிந்துரைகளையும் எடுக்க முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :