NATIONAL

ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவு, ஆனால், மறியலுக்கு ஆதரவில்லை- கியூபெக்ஸ் கூறுகிறது

ஈப்போ, ஏப் 3- ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரம் தொடர்பில் எதிர்ப்பு
உணர்வை வெளிப்படுத்தும் தரப்பினரின் பின்னால் தாங்கள் ஒன்று பட்டு
நிற்பதாக கியூபெக்ஸ் எனப்படும் அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்கம்
கூறியது. ஆயினும், மறியலில் ஈடுபடும் அத்தரப்பினரின் நடவடிக்கையில்
தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அது தெரிவித்தது.

மறியலில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கை மக்களுக்கு சுகாதாரச்
சேவையை வழங்கும் அரசாங்கத்தின் பணிக்கு இடையூறை ஏற்படுத்தும்
என்று கியூபெக்ஸ் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

ஒப்பந்த மருத்துவர்கள் தொழிற்சங்கம் சார்ந்தவர்களாக இல்லாத
காரணத்தால் எந்தவொரு தொழிலியல் நடவடிக்கையையும்
மேற்கொள்வதற்கான அடிப்படை முகாந்திரம் அவர்களுக்கு இல்லை.
மேலும், பொதுச் சேவைத் துறையின் விதிகளை மீறிய குற்றத்திற்காக
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் சொன்னார்.

மறியலில் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் பொதுச்சேவைத் துறை
விதிமுறைகளின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் சாத்தியம் உள்ளது.

இதன் காரணமாக மருத்துவர்கள் என்ற முறையில் அவர்களின் எதிர்கால
வளர்ச்சிக்கு பாதிக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. அம்மருத்துவர்கள்
குத்தகைய அடிப்படையில் பணியாற்றினாலும் அவர்களும்
பொதுச்சேவைத் துறையின் ஒரு அங்கமாகவே உள்ளனர் என்றார் அவர்.


Pengarang :