NATIONAL

மின் சிகிரெட் விவகாரம், சீனப் பயணம் குறித்து பிரதமர் இன்று மக்களவையில் விளக்கமளிப்பார்

கோலாலம்பூர், ஏப் 4- “வேப்“ எனப்படும் மின் சிகிரெட்டுகளில்
பயன்படுத்தப்படும் திரவம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ
அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கமளிப்பார்.

மின் சிகிரெட்டில் பயன்படுத்தப்படும் நிக்கோடின் திரவம் மற்றும் ஜெல்
ஆகியவை 1952ஆம் ஆண்டு விஷச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டது
தொடர்பில் கோல லங்காட் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோ
டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பும் கேள்விக்கு பிரதமர்
பதிலளிப்பார் என்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்களின்
எண்ணிக்கை, அவர்களை முழு நேரமாகப் பணியமர்த்தும் பட்சத்தில்
அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய செலவினம் குறித்து துவாரான் உறுப்பினர்
டத்தோஸ்ரீ வில்ப்ரட் மேடியஸ் தங்காவ் வினா தொடுப்பார்.

அண்மையில் பிரதமர் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் வாயிலாகக்
கிடைத்த அனுகூலங்கள் மற்றும் இதன் மூலம் நாட்டிற்குக்
கிடைக்கவிருக்கும் முதலீடுகள் தொடர்பான கேள்வியைப் புக்கிட் பிந்தாங்
உறுப்பினர் ஃபோங் கூய் லுன் முன் வைப்பார்.

இந்த கேள்விகள் யாவும் பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது
முன்வைக்கப்படும்.


Pengarang :