NATIONAL

டான்ஸ்ரீ மொகிதீன் , ஹாடி, ஹம்சா இன்றும் நாடாளுன்றம் வரவில்லை- அமைச்சர் ஃபாஹ்மி ஏமாற்றம்

கோலாலம்பூர், .ஏப் 4- நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதமரிடம் கேள்வி கேட்கும் அங்கத்தை எதிர்க்கட்சியினர் தவறவிட்டது குறித்து தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் பாஹ்மி ஃபாட்சில் ஏமாற்றம் தெரிவித்தார்.

இன்று காலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீன நாட்டுப் பயணத்தில் கிடைத்த பலன்கள், வேப் விவகாரம் மற்றும் ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சனை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவையில் பதிலளித்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், டான்ஸ்ரீ மொகிடின் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் ஆகியோர் இன்றும் கலந்து கொள்ளாததோடு கேள்விகளையும் முன்வைக்காதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இந்த அங்கம் பிரதமரிடம் கேள்விகளைத் தொடுப்பதற்கும் அவரிடம் வாதங்களை நேரடியாக முன் எடுப்பதற்கும் ஏற்ற அற்புதமான தளமாக விளங்குவதையும் அவர்  சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பில் ஃபாஹ்மி கருத்துரைப்பது இது முதன் முறையல்ல. கடந்த வாரமும் இதே விஷயத்தை முன்வைத்த அவர், காலியாக உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இருக்கைகளை சித்தரிக்கும் படத்தையும் சமூக ஊடங்களில் பதிவிட்டிருந்தார்.


Pengarang :