NATIONAL

தொழில் திறன் கட்டமைப்பை வலுப்படுத்த டேலண்ட் கார்ப்-என்.எஸ்.டி.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடில்லி, ஏப்ரல் 4- தொழில் சார்ந்த திறன் கட்டமைப்பை வலுப்படுத்த வழி வகுக்கும்
முக்கிய துறைகள் மற்றும் திவேட் கல்வியில் முக்கியமான தொழில்கள் தொடர்பாக
மலேசியாவின் டேலண்ட் கார்ப் நிறுவனத்திற்கும் இந்தியாவின் தேசிய
தொழில்திறன் மேம்பாடு கழகத்திற்கும் (என்.எஸ்.டி.சி.) இடையே புரிந்துணர்வு
ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

புதுடில்லியில் நடைபெற்ற இரு நாடுகள் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வுக்கு மலேசிய மனித வள அமைச்சர் வ.  சிவகுமார் மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையேற்றனர் என்பது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய திறன் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும்
நாட்டிற்கான திறமையான திறமைக் குழுவை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தும் என்று வர்ணிக்கப்படுகிறது. ஒப்பந்த பரிமாற்றத்தைத் தொடர்ந்து என்.எஸ்.டி.சி. துறைசார் திறன்கள் கட்டமைப்பு மற்றும் அதிலிருந்து அவர்கள் உருவாக்கிய தாக்கம் பற்றிய விளக்கங்களை மலேசிய பேராளர்களுக்கு அளித்தனர்.

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் அதுல் குமார் திவாரி மற்றும் என்.எஸ்.டி.சி. தலைமைச் செயல்முறை அதிகாரி
மணி திவாரி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். மேலும் மனித வள அமைச்சின்
துணை இயக்குநர் டத்தோ முகமது காய்ர் ரஸ்மான் முகமது அனுவார், டேலண்ட் கார்ப் தலைமைச் செயல்முறை அதிகாரி தோமஸ் மெத்தியூ புதுடில்லியில் உள்ள மலேசியாவின் துணை உயர் ஆணையர் அமிஸால் பாட்சில் ரஜாலி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :