NATIONAL

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

நியுயார்க், ஏப் 5- முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப
இங்குள்ள மேன்ஹெட்டன் நீதிமன்றத்தில் தனது எதிராக கொண்டு
வரப்பட்ட 34 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல் “வாய் திறக்காமலிருப்பதற்காக“
பணம் கொடுத்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவர்,
இந்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முதலாவது முன்னாள் அதிபராகவும்
கருதப்படுகிறார்.

நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் புடைசூழ அமர்ந்திருந்த 76 வயதான
டிரம்ப், தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அதனை
மறுத்து விசாரணை கோரினார்.

இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து தாங்கள் முடிந்தவரை
போராடப்போவதாக கூறிய டிரம்பின் வழக்கறிஞர் டோட் பிளென்சி
தமக்கெதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மிகுந்த
அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாகச் சொன்னார்.

நியுயார்க் சட்டப்படி அனைத்துக் குற்றங்களிலும் குற்றவாளி என
நிரூபிக்கப்பட்டால் டிரம்ப் 100 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டி வரும். ஆனால் உண்மையில் விதிக்கப்படும்
தண்டனை அதை விட குறைவாகவே இருக்கும்.


Pengarang :