NATIONAL

ஐடில்ஃபித்ரி க்கான பண்டிகை கால விலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 30 பொருட்களை ஏப்ரல் 13 அன்று அரசாங்கம் அறிவிக்க உள்ளது

கோலா சிலாங்கூர், ஏப்ரல் 5 – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (கேபிடிஎன்) ஏப்ரல் 13 ஆம் தேதி ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் 30 பொருட்களை அறிவிக்கும்.

அதன் அமைச்சர், டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப், பொருட்களின் பட்டியலில் குய்ஹ் ராயா தயாரிப்பதற்கான முக்கிய பொருட்களும் அடங்கும் என்றார்.

“இந்த விலைக் கட்டுப்பாடு அடுத்த வாரம் (ஏப்ரல் 13) பின்னர் இரண்டு வாரங்களுக்கு தொடங்கும், அதாவது ராயாவுக்கு ஏழு நாட்களுக்கு முன்பும், ராயாவுக்குப் ஏழு நாட்களுக்குப் பிறகும், என்று கூரினார்.

நிர்ணயித்த விலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலையும், மேலும் மக்கள் ரமலான் மற்றும் ஹரி ராயாவைக் கொண்டாடுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இவையாகும்,” என்று அவர் கூறினார்.

பொருட்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பல பெரிய பல்பொருள் அங்காடிகள் ஏற்கனவே அடிப்படை பொருட்களை “ரஹ்மா” விலையில் விற்பனை செய்வதை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இதற்கிடையில், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகமும் பண்டிகைக் காலம் முழுவதும் போதுமான அளவு முட்டை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக சலாவுதீன் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :