NATIONAL

“திலாபியா“ வகை மீன் உண்பதற்குப் பாதுகாப்பற்றதா? மீன் வளத்துறை மறுப்பு

கோலாலம்பூர், ஏப் 6- திலாபியா வகை மீன்கள் உண்பதற்குப்
பாதுகாப்பற்றவை என்றும் அந்த உண்வை உண்பதால் புற்று நோய்
உள்ளிட்ட நோய்கள் உண்டாகும் எனவும் பரப்பப்படும் தகவல்களில்
உண்மை இல்லை என்று மலேசிய மீன் வளத்துறை
தெளிவுபடுத்தியுள்ளது.

திலாபியா வகை மீன்கள், மீன் மற்றும் தாவர மூலங்களைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட புரத ஆதாரங்களை உணவாகக் கொண்டு
வளர்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

இது தவிர மீன் உணவின் பயன்பாட்டைக் குறைக்க மரபணு மாற்றப்பட்ட
சோயா மற்றும் சோளம் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. இதனை
நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத் தரப்பினருக்கும்
அங்கீகரித்துள்ளனர் என்று அது தெரிவித்தது.

சால்மோன், திலாபியா மற்றும் கார்ப் வகை மீன்களுக்குத் தாவர உணவுகள்
தீவனமாகப் பயன்படுத்தும் நடைமுறை பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட சோயா மற்றும் சோள தீவனத்தை உண்ணும்
திலாபியா மீன்களை உண்பதால் மனிதர்களுக்கு எதிர்மறையான
விளைவுகள் ஏற்படும் என்று எந்த அறிக்கையிலும் இது வரை
குறிப்பிடவில்லை என் மீன் வளத் துறை குறிப்பிட்டது.

திலாபியா மீன்கள் முள் மற்றும் தோல் இல்லாதவை என்ற கூற்றையும்த்
துறை மறுத்தது. பிரேசில் போன்ற நாடுகளில் திலாபியா மீன்களின்
தோல்களைக் கொண்டு மணிபர்ஸ், கைப்பை, காலணிகள்
தயாரிக்கப்படுவதையும் அது சுட்டிக்காட்டியது.


Pengarang :