ஆறு மாதக் குழந்தையை கொன்றதாகத் தந்தை மீது குற்றப் பதிவு 

ஈப்போ, ஏப்ரல் 6: கடந்த மார்ச் மாதம் தனது ஆறு மாத குழந்தையை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவ உதவியாளர் மீது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

30 வயதான ஜஹ்ருல் அஷ்ரிக் சுல்காஃபிலி எனபவர், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட கொலை வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் முன் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை என்பதை புரிந்து கொண்டு தலையசைத்தார்.

குற்றப்பத்திரிகையின் படி, கடந்த மார்ச் 17 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஃபேர்பார்க்கின் கம்பங் கெபயாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஆறு மாத குழந்தை முஹம்மது ஜாகிர் அசிரஃப் கொல்லப்பட்டதாக அரசு ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் இந்தக் குற்றம் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிப்பதற்கான வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கான தேதியாக ஜெசிகா அடுத்த ஜூன் 12 அன்று நிர்ணயித்தார்.

– பெர்னாமா


Pengarang :