NATIONAL

கைதிகள், முன்னாள் கைதிகளுக்குத் தொழில் வாய்ப்பை உருவாக்க சொக்சோ – சிறைச்சாலைத் துறை  ஒப்பந்தம்

கோலாலம்பூர் ஏப் 6- கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் மத்தியில் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் சொக்சோ எனப்படும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மலேசியச் சிறைச்சாலை இலாகா இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மனித வள அமைச்சர்வ. சிவகுமார் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
சொக்சோ நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் மற்றும் மலேசிய சிறைச்சாலை இலாகா ஆணையர் டத்தோ ஹாஜி நோர்டின் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொழில் துறைகளில் ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதை நோக்கமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் இதன் அந்நிய தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்க முடியும் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 588 கைதிகள், முன்னாள் கைதிகள்
மற்றும் ஹெனறி கர்னி சீர்திருத்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வேலை
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  பரோல் வழி 234 கைதிகளுக்குத் தொழில் பயிற்சி திட்டத்தில் வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளுக்குத் தொழில் பயிற்சி அளிக்கும் சொக்சோ நிறுவனத்தின் சேவையைப் பெரிதும் பாராட்டுவதாகச் சிவகுமார் தெரிவித்தார்.

சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ இயக்குநர் டி
கண்ணன், மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிச் செயலாளர்
மகேஸ்வரி மற்றும் அமைச்சரின் சிறப்பு அதிகாரி சுகுமாரன் பெரியசாமி ஆகியோர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :