NATIONAL

குடியுரிமை கோரி உள்துறை அமைச்சிடம் 150,000 விண்ணப்பங்கள்

கோல திரங்கானு, ஏப் 6- உள்துறை அமைச்சு நாடற்றச் சிறார்கள் உள்பட
150,000 பேரிடமிருந்து குடியுரிமை விண்ணப்பங்களை இதுவரை
பெற்றுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்
கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை அமைச்சு 5,700 விண்ணப்பங்களை
பரிசீலித்து அவற்றை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்பதை முடிவு
செய்துள்ளதாக அவர் சொன்னார். இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்தது
10,000 விண்ணப்பங்களை அமைச்ச இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

விண்ணப்பதாரர்கள் நாட்டில் தங்கியிராத து, இந்நாட்டில்
தங்கியிருப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டிராத து, தேவைப்படும்
ஆவணங்கள் தொடர்பான நிபந்தனைகளை பூரத்தி செய்யாத து போன்ற
காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குடியுரிமை விண்ணப்பத்திற்கான ஆவணத் தேவை சம்பந்தப்பட்ட
நிபந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக
வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் வேறு எந்த சட்டமும்
செல்லுபடியாகாது. ஆகவே அந்த நிபந்தனைகளை உள்துறை அமைச்சு
அவசியம் பின்பற்றியாக வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள திரங்கானு மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று
நடைபெற்ற கே.டி.என். மடாணி நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, மலேசிய குடிநுழைவுத் துறையின் அகப்பக்கம் மீது
இணையத் தாக்குதல் நடத்திய ஊடுருவல்காரர்களை அதிகாரிகள் இன்னும்
அடையாளம் காணவில்லை என்றும் சொன்னார்.

அந்த அகப்பக்கத்தின் முதல் பக்கம் மீது மட்டும் இணைய ஊடுருவல்
நடத்தப்பட்டுள்ளது. அந்த அகப்பக்கத்தின் இதர பகுதிகள் எந்த பாதிப்புக்கும்
உள்ளாகவில்லை என்று அவர் கூறினார்.


Pengarang :