NATIONAL

முறையான அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 30,000 மீன் கருகள் பறிமுதல் செய்யப்பட்டன

லங்காவி, ஏப்ரல் 6: கடந்த சனிக்கிழமை, லங்காவி சர்வதேச விமான நிலைய சரக்கு வளாகம் (எல்திஏஎல்) வழியாக அனுமதியின்றி கொண்டு வர முயன்ற 30,000 மீன் கருவிதைகளை ஜபாத்தன் பெர்கிட்மாத்தன் கோரான்டின் மற்றும் பெமெரிக்ஸான் மலேசியா (மகிஸ்) கைப்பற்றியது.

மகிஸ் லங்காவி நுழை வாயிலின் தலைவர், ஹஸ்லினா எம்டி ஷெரீப் கூறுகையில், இந்தோனேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரி.ம 25,000 மதிப்புள்ள மீன் கருவிதை, இரவு 7.20 மணி அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கண்டறியப்பட்டதாக பெரிட்டா ஹரியான் தெரிவித்தது.

60 பெட்டிகளில் நிரப்பப்பட்ட 30,000 மீன் கருவிதைகள் முறையான இறக்குமதி அனுமதியின்றி கொண்டு வர முயன்றதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேலதிகாரி விசாரணைக்காக குறித்த அனைத்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரிவு 11(1) கீழ், மலேசிய ஜபாத்தன் பெர்கிட்மத்தான் கோரான்டின் மற்றும் பெமெரிக்ஸான் மலேசியா சட்டம் 2011 (சட்டம் 728) இன் படி ரி.ம 100,000 அபராதம் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று ஹஸ்லினா கூறினார்.

“நோய் கட்டுப்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு உத்தரவாதங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாட்டின் நுழைவாயிலில் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும்.

“இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தாவரங்கள், விலங்குகள், மீன்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவை பூச்சிகள், நோய்கள் மற்றும் அசுத்தங்களின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் மகிஸ் இந்த விஷயத்தை கடுமையாக  கருதுவதாக  அவர் கூறினார்.


Pengarang :