SELANGOR

750 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு RM150,000 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் – பாயா ஜெராஸ் தொகுதி

ஷா ஆலம், ஏப்ரல் 10: பாயா ஜெராஸ் தொகுதியில் 750 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு (B40) RM150,000 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களை விநியோகித்தது.

“இந்த உதவியின் மூலம், அவர்களின் நிதிச் சுமையை ஓரளவுக்குக் குறைப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் அவர்கள் ஐடில்பித்ரியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

வவுச்சர் வழங்கும் நிகழ்வில் 750 செட் ராயா பலகாரங்களும்  பெறுனர்களுக்கு விநியோகித்ததாக கைருடின் கூறினார்.

ஜோம் ஷாப்பிங் பேராயன் என்பது மூன்று முக்கிய பண்டிகைகள் காலங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் ஒரு திட்டமாகும்.

இந்த ஆண்டு, மொத்தம் 37,250 குடும்பங்கள் RM200 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன. அதன் மொத்த ஒதுக்கீடு RM7.45 மில்லியன் ஆகும்.

மாநில அரசு சிலாங்கூர் பட்ஜெட் 2023ன் மூலம் வவுச்சர்களை வழங்குவதற்காக RM16.48 மில்லியனை ஒதுக்கியது. மாதாந்திர குடும்ப வருமான வரம்பு RM2,000 லிருந்து RM3,000 ஆக உயர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் 82,400 பயனாளிகள் பயனடைந்தனர்.


Pengarang :