SELANGOR

நோன்பு திறப்பு  உணவுக்கு  மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது  எம்பிஐ RM50,000 ஒதுக்குகிறது

சுபாங் ஜெயா, ஏப்ரல் 10: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ, ரிம 5 மதிப்புள்ள ரஹ்மா வவுச்சர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பஜார்களில் விநியோகிக்க சுமார் ரிம 50,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

நோன்பு திறப்பதற்கு உணவு வாங்கும் போது குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைப்பதோடு, பணமில்லா கட்டண முறையை ஊக்குவிக்க பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (PLATS) முயற்சி முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“அந்தத் தொகையில், யுஎஸ்ஜே 4, செக்சியன் 7 ஷா ஆலம், டாமான்சாரா டாமாய், சைபர் ஜெயா பார்க் மற்றும் தாமான் மெலாவத்தி கோம்பாக் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பஜார்களுக்கு விநியோகிக்க கூப்பன்களை நாங்கள் தயார் செய்தோம்.

முன்னதாக அவர் இங்குள்ள யு எஸ் ஜே 4 ரமலான் பஜாருக்கு வருகை தருபவர்களுக்கு கூப்பன்களை விநியோகித்தார், மேலும் வர்த்தகர்களிடம் சிறிது நேரம் அளவளாவினர்

மக்கள் உணவு வாங்குவதற்கு வசதியாக, எந்த பஜார் வர்த்தகரிடமும் கூப்பனை மீட்டுக் கொள்ளலாம் என்று அமிருடின் கூறினார்.

“வணிகர்கள் சம்பந்தப்பட்ட கூப்பன்களை வைத்திருக்க வேண்டும். பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையை நிர்வகிக்க உள்ளூர் அதிகாரிகள் வருவார்கள்,” என்று அவர் கூறினார்.

நியாயமான விலையில் உணவு பெறுவதற்கு வசதி அற்றவர்களுக்கு இந்த நடவடிக்கை வாய்ப்புகளை வழங்குகிறது.


Pengarang :