NATIONAL

பி.எஸ்.வி. மற்றும் ஜி.டி.எல். லைசென்ஸ் பெறுவதற்கான எழுத்துப் முறைத் தேர்வு ரத்து

புத்ரா ஜெயா, ஏப் 10- பயணிகளை ஏற்றக்கூடிய பொது போக்குவரத்து
வாகனங்களுக்கான பி.எஸ்.வி. மற்றும் சரக்கு வானகங்களுக்கான
ஜி.டி.எல். லைசென்ஸ் பெறுவதற்கான எழுத்து முறை தேர்வு ரத்து
செய்யப்படுகிறது.

அவ்விரு வகை லைசென்ஸ்களையும் பெற விரும்புவோர் எழுத்து முறை
வகுப்பில் முழுமையாகப் பங்கு பெற வேண்டும் என்று போக்குவரத்து
அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

எனினும், பஸ்களை ஓட்டுவதற்கான பி.எஸ்.வி லைசென்ஸ் மற்றும்
கனரக லோரிகளை ஓட்டுவதற்கான ஜி.டி.எல். லைசென்ஸ் பெற
விரும்புவோர் எழுத்து முறைத் தேர்வு மற்றும் செயல்முறைப் பயிற்சி
ஆகிய இரண்டிலும் பங்கேற்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று இங்கு பி.எஸ்.வி. மற்றும் ஜி.டி.எல். லைசென்ஸ் தொடர்பான புதிய
விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட செய்தியாளர்
கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து வகையான பொது போக்குவரத்து மற்றும் கனரக வாகன
லைசென்ஸ் தொடர்பான எழுத்து முறைப் பயிற்சி சாலை போக்குவரத்து
இலாகா (ஜே.பி.ஜே.), வாகனமோட்டும் பள்ளிகள் மற்றும் ஜே.பி.ஜே.வின்
மேற்பார்வையில் செயல்படும் பொருள் பட்டுவாடா நிறுவனங்களின்
இணையத் தளங்கள் மூலம் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அவர்
சொன்னார்.


Pengarang :