SELANGOR

சுங்கை ரமால்  தொகுதியைச் சேர்ந்த 33 சிறுவர்களுக்கான சத்துணவு

ஷா ஆலம், ஏப்ரல் 10: அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாத் (ASAS) திட்டத்தின் கீழ் சத்துணவு உதவி  திட்டத்தில்  சுங்கை ரமால் மாநில சட்டமன்றத்தில் தொகுதியின்  33 சிறுவர்கள் பயன் பெற்றனர்.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இத்திட்டத்தின் வழி  ஐந்து மாதங்களுக்கு ஊட்டச்சத்து உணவு உதவி பெற்றதாக அத்தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் மஸ்வான் ஜோஹர், கூறினார்.

“சிலாங்கூரில் உள்ள பி40 வை சார்ந்த குடும்ப  சிறுவர்களுக்கு இது ஒரு சத்தான உணவு உதவியாகும்” என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.

தங்கள்  பிள்ளைகள்  ஆரோக்கியமான  உணவு உதவி பெற்றது  குறித்து  பெற்றோரிடமிருந்து  ஆக்ககரமான  கருத்துகள் கிடைத்ததாக மஸ்வான் கூறினார்.

“சிறுவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், முன்பு போல் சளி அல்லது காய்ச்சல் குறைந்ததாகவும் மேலும் உடல் எடை அதிகரிப்படுகிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்,” என்று அவர் கூறினார்.

இல்திசம் சிலாங்கூர் செஹாட் நிகழ்ச்சி நிரல் மூலம், இந்த ஆண்டு  இத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநில அரசு ரிம 500,000 ஒதுக்கீடு செய்தது.

ஊட்டச்சத்து பேக்கில் வழங்கப்படும் உணவுகளில் செயல்முறை முலம் பால், சத்தான தானிய அடிப்படையிலான உணவுகள் மற்றும் மல்டிவைட்டமின்களும் அடங்கும்.


Pengarang :