NATIONAL

அந்நிய சந்தைகளில் ஊடுருவும் முயற்சியாக ஹிஜ்ரா தொழில் முனைவோருக்குப் பயிற்சி

ஷா ஆலம், ஏப் 10- யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஏற்பாட்டு
ஆதரவைப் பெற்ற தொழில் முனைவோருக்கு வரும் ஜூலை மாதம்
சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புருணை, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் ஊடுருவுவதற்கு ஏதுவாக
சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரை தயார் படுத்தும் நோக்கில் இந்த
பயிற்சி வழங்கப்படுகிறது.

தொழில் முனைவோரும் அவர்களின் தயாரிப்பு பொருள்களும்
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போட்டியிடும் தரத்தில் இருப்பதை
உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஹிஜ்ரா
அறவாரியத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிர்வாகி எல்யானி
இசா ஜூபிர் கூறினார்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் 30.00 வெள்ளியாகும்.
இந்தப் பயிற்சியில் உற்பத்தி பொருள்களைத் தேர்ந்தெடுப்பது, விற்பனை
வியூகம், விலை, சந்தை இலக்கு, தயாரிப்பு பொருளின் மேம்பாடு மற்றும்
சம்பந்தப்பட்ட நாடுகளின் தர நிர்ணயம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து
விரிவாக விளக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தங்களின் ஆதரவைப் பெற்ற பல தொழில் முனைவோர் வெளிநாட்டுச்
சந்தைகளில் ஊடுருவியுள்ளதை ஹிஜ்ரா நிரூபித்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

எங்களின் தொழில் முனைவோரில் பலர் சிங்கப்பூர், புருணை,
ஆஸ்திரேலியா, கட்டார், கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற
நாடுகளுக்கு தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளதை கருத்தில்
கொண்டு இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.


Pengarang :