NATIONAL

சுங்கத் துறையின் சோதனையில் 900,000 சிகிரெட்டுகள் பறிமுதல்- ஆடவர் கைது

தும்பாட், ஏப் 10- பாசீர் புத்தே மற்றும் மாச்சாங்கில் கடந்த
செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில்
606,899 வெள்ளி மதிப்பிலான 900,040 சிகரெட்டுகளை அரச மலேசிய சுங்கத்
துறையின் கிளந்தான் மாநிலப் பிரிவு கைப்பற்றியது.

பாசீர் பூத்தே, கம்போங் ஸ்தோபாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது
நடவடிக்கைகையில் 20,520 சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 26
வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அத்துறையின்
இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் கூறினார்.

சிகிரெட்டுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும்
பெரேடுவா பெஸ்ஸா ரக கார் ஒன்றும் இச்சோதனையின் போது
பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதே வட்டாரத்திலுள்ள கம்போங் கோங் டத்தோவில் மேற்கொள்ளப்பட்ட
மற்றோரு சோதனையில் 28,800 கடத்தல் சிகிரெட்டுகள் பறிமுதல்
செய்யப்பட்டன என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் சொன்னார்.

தாமான் ஸ்ரீ மாச்சாங்கில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சோதனையில்
பல்வேறு ரகங்களிலான 850,620 சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் சிகிரெட்டுகளைச் சிறிய எண்ணிக்கையில் கொஞ்சம்
கொஞ்சமாக கடத்தி வந்து இரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைத்து
பின்னர் அவற்றை அதிகாரிகளுக்கு சந்தேகம் வராத வகையில் சிறிது
சிறிதாகச் சந்தையில் விநியோகம் செய்வது அந்த ஆடவரின் வழக்கமான
பாணியாக இருந்து வந்துள்ளது என அவர் கூறினார்.


Pengarang :