NATIONAL

கிரிக் அருகே வனப்பகுதியில்  ராணுவ வீரர் மாயம்

ஈப்போ, ஏப்ரல் 11: கடந்த வெள்ளியன்று கிரிக் அருகே உள்ள பெளும் வனத்தின் உட்பகுதியில்  கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 33 வயதான அந்த ராணுவ வீரர், ராயல் மலாய்  படைப்பிரிவின் (RAMD) கேம்ப் ஸ்ரீ பெந்தோங், பகாங்கின் 25வது பட்டாலியனைச் சேர்ந்தவர் என்று கூறினார்.

அவர் கூறுகையில், நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் கோப்ரல் காணாமல் போனதாக அவரது தரப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது.

காணாமல் போன முதல் நாளிலிருந்து மலேசிய ஆயுதப் படைகளால் (ஏடிஎம்) தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் பாதிக்கப்பட்டவரும் மற்ற ஐந்து உறுப்பினர்களும் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது காணாமல் போனது ஆரம்பக் காவல்துறையினர் விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :