NATIONAL

1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போலி வர்த்தக முத்திரை (Branded) பைகள் பறிமுதல் செய்யப்பட்டன

ஷா ஆலம், ஏப்ரல் 11 – சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் (Selangor Ministry of Domestic Trade) மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (Cost of Living) கேபிடிஎன் (KPDN) இன்று கிள்ளானில்  உள்ள உள்ள இரண்டு வளாகங்களில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 10,000 போலி வர்த்தக முத்திரை பதித்த கைப்பைகளை கைப்பற்றியது.

சிலாங்கூர் கேபிடிஎன் (KPDN) இயக்குனர் முகமது ஜுஹைரி மாட் ராடே (Mohd Zuhairi Mat Radey) கூறுகையில், 18 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணும் பிற்பகல் 1 மணி அளவில் போலி வர்த்தக முத்திரை பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப் பட்டுள்ளனர், இது இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய போலி வர்த்தக முத்திரை  குற்றமாகும்.

ஒன்பது அமலாக்கப் பணியாளர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை இரண்டு வாரங்களாக சேகரிக்கப்பட்ட  உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

“இந்த வளாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வர்த்தக முத்திரைகள் சட்டம் 2019 இன் பிரிவு 102(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, இதில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை சட்டத்தின் பிரிவு 100 இன் கீழ் தவறாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை உள்ளடக்கியது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு பொருட்களுக்கும் ரிம 10,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம், அதே நேரத்தில் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பொருட்களுக்கும் ரிம 15,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.


– பெர்னாமா


Pengarang :