NATIONAL

வணிகத்தை விரிவுபடுத்த ஹிஜ்ரா ஸ்கீம் ஐ-பிசினஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஏப்ரல் 11: சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த மூலதனத்தைப் பெற ஸ்கிம் ஐ-பிசினஸ் திட்டத்தில் RM50,000 வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தத் திட்டத்திற்கு mikrokredit.selangor.gov.my மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்று யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

“இந்த திட்டத்தின் மூலம் RM50,000 வரை வணிக மூலதனம் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்ப  தகுதி பின்வருவன

மலேசியரகவும்

சிலாங்கூரில் வசிப்பவர்கள் அல்லது குடியிருப்பாளர்கள்

சிலாங்கூரில் வாக்குப்பதிவு  கொண்டவராக இருக்க வேண்டும்.

அவர் வயது 18 முதல் 65 க்குள் இருத்தல் வேண்டும்.

வணிகம் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும்

செல்லுபடியாகும் வணிக உரிமம் அல்லது அனுமதி வேண்டும்

ஹிஜ்ரா, i-Agro, Zero to Hero, Niaga Darul Ehsan (NaDI), Go Digital, i-Lestari மற்றும் i-Bermusim போன்ற நிதித் திட்டங்களையும் வழங்குகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 57,492 தொழில் முனைவோர் தங்கள் வணிகங்களை மேம்படுத்த  2015 இல் நிறுவப்பட்டதிலிருந்து பல்வேறு நிதித் திட்டங்களின்  வழி  RM749.63 மில்லியன் மதிப்பில் ஹிஜ்ரா வழங்கியுள்ளது.


Pengarang :