NATIONAL

டிரெய்லர் லோரி பள்ளி வேனை மோதியது- 15 மாணவர்கள் காயம்

குவா மூசாங், ஏப்.11- குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு எதிரே 
உள்ள சாலை சந்திப்பில் ஐந்து நிகழ்ந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் பயணம் செய்த  பள்ளி வேன் டிரெய்லர் லோரியுடன் மோதி  19 மீட்டர் தூரம்  இழுத்துச் செல்லப்பட்டதாகக் குவா மூசாங்  மாவட்டக் காவல்துறை குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் சிக் சூன் ஃபூ கூறினார்.

இந்த  விபத்தில் ஏழு முதல் 10 வயதுடைய மூன்று மாணவிகள் பலத்த காயமடைந்தனர். எஞ்சியவர்கள் லேசான காயமடைந்து குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

ஏழு வயது சிறுவனுக்கு வலது தோள்பட்டை எலும்பில்  முறிவு ஏற்பட்டது, அதே சமயம் எட்டு வயது சிறுவனின் நெற்றியில் ரத்த உறைவும் 10 வயது சிறுவனுக்கு வலது தொடை எலும்பு சிதைவும் ஏற்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கியா ஸ்பெக்ட்ரா கார் ஒன்று கவனக்குறைவாகச் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பியதால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, அந்த காரை வெட்டுமரங்களை 
ஏற்றிய டிரெய்லர் மோதியது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 43(1)ன் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி சாலை விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை 
நடைபெற்று வருகிறது.

Pengarang :