SELANGOR

குடும்பம் வருமானத்தை ஈட்டவும், அதிகரிக்கவும் உணவு தொடர்பான பட்டறை  வழி மகளிர் மேம்பாடு  – செந்தோசா தொகுதி

ஷா ஆலம், ஏப்ரல் 11: உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் பெண்கள் குடும்ப வருமானத்தை ஈட்டவும், அதிகரிக்கவும் உதவும் வகையில் உணவு பதனிடும் பட்டறை ஒன்றை செந்தோசா தொகுதி ஏற்பாடு செய்துள்ளது.

அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் ஜி குணராஜ் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை செந்தோசா தொகுதி சமூக மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறக்குறைய 30 பேர் கலந்து கொண்டனர்.

“இந்த திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்களுக்கு  உணவின் சுவையை குன்றாமல், அவை  நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்கும் பாதுகாப்பு நுட்பங்களும் கற்பிக்கப்பட்டன.

“பங்கேற்பாளர்களுக்கு உதவ இந்த நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், அனுபவமிக்க சமையல்காரர்கள் வகுப்பை நடத்தினர். இதனால் பங்கேற்பாளர்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கு முன் கூடுதல் திறன்கள் மற்றும் சரியான பாதுகாப்பு நுட்பங்களைப் பெற முடியும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

செந்தோசா தொகுதி மகளிர் மையம் (PWB) ஏற்பாடு செய்திருக்கும் இந்த இலவச நிகழ்ச்சியின் மூலம், பங்கேற்பாளர்கள் நெத்திலி சாஸ் மற்றும் ஊறுகாயை பாதுகாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம். இம்முறைகள் உணவின் ஆயுட்காலம் நீடிக்கவும், அவை புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும் என்று குணராஜ் கூறினார்.

இந்நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், அவரது தரப்பு ஐடில்பித்ரிக்குப் பிறகு, அத் தொகுதியில் உள்ள அதிகமான பெண்கள் அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் வகையில் இரண்டாவது தொடர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.


Pengarang :