SELANGOR

பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு வவுச்சர்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 12: கின்றாரா தொகுதி அலுவலகம் கடந்த சனிக்கிழமை பூச்சோங்கின் கம்போங் பத்து 13, புயலால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 வீடுகளில் வசிப்பவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு வவுச்சர்களை வழங்கியது.

கின்றாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான இங் பாதிக்கப்பட்டவர்களின் செலவுகளை ஈடு செய்வதற்கு அந்த வீடுகள் ஒவ்வொன்றிற்கும் RM200 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

“மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட 300 கூரை அலகுகளை ஒரு கூரைக்கு RM50 மதிப்பீட்டில் நன்கொடையாக வழங்கவும் நாங்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

“கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட பிறகு, அனைத்து கூரைகளுக்கு உற்பத்தியாளர் டெட்ரா பாக் சலுகை விலையில் வழங்க ஒப்புக் கொண்டார்.

“நேற்று, பழுது பார்க்கும் பணி தொடங்கியதை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கும் வண்ணம் , பழுதுபார்க்கும் ஒப்பந்ததார்ர் ஊழியர்களுக்கு ஊதியத்தில் ஒரு சிறிய பங்களிப்பையும் கொடுத்தேன்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, கம்போங் புலாவ் மெரந்தி, தாமான் புத்ரா பெர்டானா மற்றும் அபார்ட்மெண்ட் ஆஞ்சனா புக்கிட் பூச்சோங் 2 ஆகியவற்றைச் சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்கள் புயலால் பாதிக்கப் பட்டன.

மாலை 4.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பல பொது உள்கட்டமைப்புகள், மசூதிகள், சூராவுகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் வீடுகள் சேதமடைந்தன.


Pengarang :