NATIONAL

ஊடகப் பயிற்சியாளர்கள், உள்ளூர் கலைஞர்களுடன் பிரதமர் நோன்பு துறந்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில்  ஊடக பயிற்சியாளர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களுடன் தனது நேரத்தைக் கழித்தார்.

மாலை 6.47 மணிக்கு வெளிர் நீல நிற மலாய் சட்டை அணிந்து வந்த பிரதமருடன், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் அவரது துணை அமைச்சர்  தியோ நீ சிங் ஆகியோர் உடன் சென்றனர்.

நோன்பு திறப்பதற்கு முன், பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் கைகுலுக்கி, கலந்து உரையாடி, நட்பாக நேரத்தை செலவிட்டார்.

ஊடக நிறுவனத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச த்தைச் சேர்ந்த சுமார் 1,000 விருந்தினர்கள், கலைஞர்கள் மற்றும் அம்பாங்கின் ரூமா காசே இபூவைச் சேர்ந்த 30 ஆதரவற்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மலேசியாவின் தேசிய செய்தி அமைப்பின் (பெர்னாமா) தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்லான் அரிஃபின், NSTP குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் டத்தோ அகமது ஜைனி கமருஸ்ஸாமான் மற்றும் மீடியா ப்ரிமா பெர்ஹாட் குழுமத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சையத் ஹுசைன் அல்ஜுனிட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், கலைஞர் இஃபா ரசியா, நடிகரும் தொகுப்பாளருமான டத்தோ ஏசி மிசல், வானொலி தொகுப்பாளரும் பாடகியுமான டினா நட்சீர் மற்றும் திரைப்பட இயக்குநர் டத்தோ சுஹைமி பாபா உள்ளிட்ட உள்ளூர் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

– பெர்னாமா


Pengarang :