NATIONAL

நான்கு மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கு மேலும் 2 கோடி வெள்ளி நிதி- பெர்னாஸ் வழங்கியது

புத்ராஜெயா, ஏப் 12- பாடிபெராஸ் நேனஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்)
நிறுவனம் மேலும் இரண்டு கோடி வெள்ளியை விவசாயம் மற்றும் உணவு
பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

கெடா, பெர்லிஸ், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களில்
உள்ள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் இந்த நிதி
வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான 25 கோடி வெள்ளி சிறப்பு நிதியுதவித் திட்டத்தின்
மூலம் 81,153 பதிவு பெற்ற விவசாயிகள் பயன் பெறுவர் என்று அமைச்சு
அறிக்கை ஒன்றில் கூறியது.

பெர்னாஸ் நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் ஒரு கோடி வெள்ளியை
அமைச்சுக்கு வழங்கியதாகவும் அத்தொகை கிழக்கு கரை மாநிலங்களான
கிளந்தான், திரங்கானு, பகாங் ஆகியவற்றில் உள்ள விவசாயிகளுக்குப்
பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி
அறிவித்த விவசாயிகளுக்கான பெர்னாஸ் நிறுவனத்தின் 6 கோடி
வெள்ளி நன்கொடையில் ஒரு பகுதியாக இந்த 3 கோடி வெள்ளி
விளங்குகிறது.

இந்த நன்கொடை இம்மாதம் 14ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்குப்
பகிர்ந்தளிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.


Pengarang :