NATIONAL

தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையில்  அரசு சாரா நிறுவனங்கள், குடியிருப்போர் சங்க ஒத்துழைப்புக்கு  பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அழைப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 12: தெரு நாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கை மிகவும் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் பங்கேற்க அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் ஒத்துழைப்பை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) அழைக்கிறது.

அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் யூனிட், தெரு நாய்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் உடல் கேமராக்களை அணிய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. இதற்குக் காரணம் மேலதிகாரிகள் அந்நடவடிக்கையைப் பதிவு செய்ய ஊழியர்கள் புகைப்படத்தை அனுப்ப வேண்டும்.

“மேலும், அதிக ஆபத்துள்ள இந்த செயலுக்கு அமலாக்க நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப் படுவதை உறுதி செய்வதற்காகக் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் இது மேற்கொள்ளப்படும்.

” பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி விசாரணைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட காட்டு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் முறைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்க முறையைத் தீர்மானிப்பதற்கு முன், செயல்பாட்டு அபாயத்தின் அளவைக் கண்டறியும் என்று உள்ளூர் அதிகாரசபை (PBT) தெரிவித்துள்ளது.

மார்ச் 22 அன்று சமூக ஊடகங்களில் வைரலான தாமான் கனகபுரம், பிரிவு 18, பெட்டாலிங் ஜெயாவுக்கு அருகில் தெருநாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்த சண்டையைத் தொடர்ந்து இந்த மறுசீரமைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில், நாய் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட தடியால் சம்பந்தப்பட்ட முதியவர் தாக்கப்பட்டார். இதனால் அந்த நபர் தன்னை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஊழியர்கள் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்தார்.


Pengarang :