SELANGOR

இலவசச் சுகாதாரப் பரிசோதனைக்கு அழைப்பு – பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், ஏப்ரல் 13: இந்த சனிக்கிழமை அன்று பண்டார் உத்தாமாவில் உள்ள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் (ADN) இலவசச் சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்க கம்போங் சுங்கை காயு ஆராவில் வசிப்பவர்களை அழைக்கிறது.

அசுந்தா பெட்டாலிங் ஜெயா மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுகாதாரப் பரிசோதனை கம்போங் சுங்கை காயு அரா ராயா மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளதாக பண்டார் உத்தமாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

“RM2,500 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் உள்ள மலேசிய குடியிருப்பாளர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

“அசுந்தா மருத்துவமனையின் சமூக நல வெளிநோயாளி திட்ட (SWOP) அட்டைக்கு, பொதுமக்கள் ஆய்வு நாளன்று சம்பள சீட்டின் நகல் மற்றும் சமூக நலத்துறையின் உறுதிப்படுத்தல் கடிதம் கொண்டு வந்து விண்ணப்பிக்கலாம்” என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அதன்படி, விருப்பமுள்ளவர்கள் http://tiny.cc/KlinikKayuAra என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது பரிசோதனை நாள் அன்று நேரடியாக வரலாம் என்றார்.

“இந்த இலவசச் சுகாதாரப் பரிசோதனை மாதாந்திர நிகழ்வாகும், மேலும் இங்கு பல குடியிருப்பாளர்களுக்கு இச்சேவை தேவைப்படுவதால் நாங்கள் கம்போங் சுங்கை காயு ஆராவைத் தேர்ந்தெடுத்தோம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 016-6849 371 என்ற ஹாட்லைனில் கேட்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :