NATIONAL

இராணுவ வீரரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது

ஈப்போ, ஏப்ரல் 13:   கிரிக் அருகே உள்ள பெளும் வனத்தின் உட்பகுதியில்  கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போன, ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD)  சிப்பாய்,  கேம்ப் ஸ்ரீ பென்தோங், பகாங்கின் 25 வது பட்டாலியனைச் சேர்ந்த  வீரரின்  சடலத்தைக் காவல்துறையினர் இன்று கண்டுபிடித்தனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறுகையில், ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மலேசிய ஆயுதப்படை (ஏடிஎம்) நடத்திய தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கையின் விளைவாக, காணாமல் போன இராணுவ வீரரின் சடலம் என்று நம்பப்படும் அ சடலம் இன்று காலை 10.15 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிரிக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக முகமட் யூஸ்ரி கூறினார்.

“பிடிஆர்எம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், பாதிக்கப்பட்டவரும் மற்ற ஐந்து உறுப்பினர்களும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட இராணுவ வீரர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

 – பெர்னாமா


Pengarang :