NATIONAL

சமூக ஊடகங்களில் இனவெறி  கருத்துக்களை பதிவேற்றியதாக நம்பப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கோலாலம்பூர், ஏப். 13: பொது ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலான இனவாதக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய சந்தேகத்தின் பேரில் ரோஸ்லிசல் ரஸாலி என்பவரை போலீசார் நேற்று மதியம் கைது செய்தனர்.

அரச மலேசிய போலீஸ் படையின் நிறுவன தொடர்பு துறையின்  தலைமை  அதிகாரி  (பி.டி.ஆர்.எம்) ஸ்கந்தகுரு கூறுகையில், 46 வயதான ரோஸ்லிசல், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் குழுவால் தலைநகரில் மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு உதவும் வகையில் மொபைல் போன் மற்றும் மடிக் கணினியையும் போலீசார் பறிமுதல் செய்தனர், மேலும் இன்று ரிமாண்ட் உத்தரவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது,” என்று அவர்  தெரிவித்தார்.

ஸ்கந்தகுருவின் கூற்றுப்படி, தேச துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

“தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் சந்தேக நபர் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். மேலும் இணையதள சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்துவதாகும்” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், முதல் தேசத்துரோக வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக ரோஸ்லிசல் ரசாலியை கண்காணித்து வந்ததாக போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.

– பெர்னாமா


Pengarang :