NATIONAL

387 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 13 : ரம்லான் தொடக்கம் முதல் நேற்று வரை மொத்தம் 387 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் கோலா சிலாங்கூர் மாநகராட்சியின் (MPKS) சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது.

கோலா சிலாங்கூர் மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் கூறுகையில், ரம்லான் பஜார் மற்றும் உணவகங்களில் சேகரிப்பு பிரச்சாரத்தின் மூலம் பெரும்பாலான சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது.

“ஒவ்வொரு முகிமின் போதும், தலைமை அலுவலகமாக  அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை சேகரிப்பதற்கான தொட்டிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

“எம்பிகேஎஸ், ரமலானின் 19 நாட்களில் 387 கிலோகிராம் சமையல் எண்ணெய்யை சேகரித்துள்ளது. இந்த ஆண்டு 10,000 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கும் இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஜெஃப்ரி அப் மனாஃப் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த திட்டமானது கழிவுப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான மாநில அரசின் முயற்சியை ஆதரிப்பதற்காகவும்.

இந்த பிரச்சாரத்திற்குப் பொதுமக்கள் அனைவரும்  ஆதரவளிக்குமாறு அறிவுறுத்தப் படுவதாகவும், கோலா சிலாங்கூர் மாநகராட்சிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் சமையல் எண்ணெய்க்கும் RM1.50 வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கேள்விகளுக்குக் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை 03-3281 1368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :