NATIONAL

நிபந்தனைகளை மீறி, உரிமம் இல்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ததற்காக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 16: மார்ச் 28 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலப்பகுதியில் நிபந்தனைகளை மீறி, உரிமம் இல்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்ததற்காக மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியப் போலீஸ் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாடுடின், சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் கீழ் விசாரிக்கப்பட்டன. இதன் வழி ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

“ராயல் மலேசியன் காவல்துறை எப்போதும் நாடு முழுவதும் விரிவான, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனையை மேற்கொள்கிறது.

“சட்டவிரோதப் பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டாம் என்று மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐடில்பித்ரி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பட்டாசு விற்பனை செய்வதற்கான உரிமம் பெற காவல் துறைக்கு மொத்தம் 6,526 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக நூர்சியா கூறினார்.

அவர் கருத்துப்படி, அந்த எண்ணிக்கையில், மொத்தம் 5,188 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டது, அதே நேரத்தில் 1,338 பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டன.

– பெர்னாமா


Pengarang :