NATIONAL

முன்னாள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்களுக்கு  நோய் சிகிச்சைக்கான செலவுக்கு உதவி  பரிசீலனை

ஷா ஆலம், ஏப்ரல் 17: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு (OKU) அதிக ஆபத்துள்ள நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்ய உதவும் திட்டத்தை சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

விளையாட்டு துறை எஸ்கோ முகமட் கைருடின் ஓத்மான், உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண தேசிய விளையாட்டு வீரர்கள் அறக்கட்டளை (யாகேப்) உடன் இணைந்து செயல்படும் என்றார்.

“பரிந்துரைகள் உள்ளன, ஆனால் இது மாநில அரசு மற்றும் யாகேப்பின் ஒத்துழைப்பின் நடவடிக்கையாகும்.

“உள்கட்டமைப்பின் அடிப்படையில் மாநில அரசு எங்களுக்கு உதவுகிறது, அதே நேரத்தில் யாகேப் எங்களுக்கு உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்துகிறது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்ட  மகிழ்ச்சிகரமான விளையாட்டாளர்கள் (அத்லிட் செரியா) சிலாங்கூர் திட்டம் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு, வீட்டு மேம்பாட்டு உதவிகளிலும் கவனம் செலுத்துகிறது என்றும் முகமட் கைருடின் தெரிவித்தார்.

“ஆரோக்கியமற்ற விளையாட்டு வீரர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை நாங்கள் பரிசீலித்து பார்ப்போம்,” என்று அவர் கூறினார்.

இந்த மாதத் தொடக்கத்தில், தேசியக் கால்பந்து ஜாம்பவான் காலித் அலி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :